top of page

மனநலம்

  • Writer: Deva
    Deva
  • Oct 14, 2019
  • 2 min read

பெண்களுக்கு ஏற்படும் பொதுவான மனநல பிரச்சினைகள்:

நாம் சாதாரண விஷயம் என நினைக்கும் பல விஷயங்கள் மனநல பிரச்சனைகளாக இருக்க வாய்ப்புள்ளது,அதுவும் பெண்களுக்கு அதிகம். பெண்களின் வித்தியாசமான உயிரியல் கட்டமைப்பும், ஹார்மோன்களும் அவர்கள் எளிதில் திடீர் மனநிலை மாற்றங்களுக்கு உட்பட வழிவகுக்கின்றன.

பெண்களுக்கு வரக்கூடிய பொதுவான சில மனநல பிரச்சனைகள்:


friends facility service


* மன இறுக்கம் (Depression) WHO உலக சுகாதார அமைப்பின் கூற்றின்படி,பெண்கள் அதிகமாக எதிர்கொள்ளும் மனநல பிரச்சனைகளில் மிகவும் பொதுவான ஒன்றாக இருப்பது மன இறுக்கமாகும். அதே சமயம் ஆவணப்படுத்தப்படாத நிகழ்வுகள் ஏராளமாக இருக்கலாம். இதற்கு காரணம், பெரும்பாலான சமயங்களில் அவை வெறும் திடீர் மனநிலை மாற்றங்களாக வந்து சென்றுவிடுகின்றன, ஏதோ சில நாட்கள் நீடிக்கும் மன இறுக்கமாகக் கருதப்படுகின்றன, அவை தானாக சரியாகிவிடும் என்று கண்டு கொள்ளப்படுவதில்லை. உண்மையில்,மனதை வருத்தும் சோகமும், நம்பிக்கையின்மையும் இருக்கும் நிலையே மன இறுக்கமாகும்.


* தினசரி செயல்பாடுகளில் ஆர்வம் குறைவது

* மிக அதிகமாக அல்லது மிக குறைவாகத் தூங்குவது

* அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது அல்லது சாப்பிடாமல் இருப்பது

* நம்பிக்கை இழந்த உணர்வோடு காணப்படுவது

* தன்னை பற்றிய மதிப்பின்றி இருப்பது

* சோர்வாக இருப்பது போன்றவை மன இறுக்கத்தின் பிற அறிகுறிகளாகும். மேலே குறிப்பிட்ட அறிகுறிகளும், திடீர் மனநிலை மாற்றங்களும் எரிச்சல் மற்றும் தற்கொலை எண்ணங்கள் ஆகியவையும் மன இறுக்கம் உள்ளது என எச்சரிக்கும் அடையாளங்களாகும். இந்த அறிகுறிகளில் ஒன்றோ, சிலவோ இரண்டு வாரங்களுக்கும் மேல் தொடர்ந்து நீடித்தால், உளவியல் நிபுணரிடம் ஆலோசனை பெற்று தகுந்த சிகிச்சை பெற்று கொள்வது அவசியமாகும்.

* பீதி மற்றும் மனக்கலக்க கோளாறுகள் (Panic and Anxiety disorders) பெரிய செயல்களைச் செய்யும் முன்பு ஒருவருக்கு ஓரளவு பீதியாகவும் மனக்கலக்கமாக இருப்பதும் சகஜம் தான். ஆனால்,அந்த பயம் நீங்காமல் தொடர்ந்து இருப்பதும்,சமூக மற்றும் மனம்சார்ந்த செயல்பாடுகளை பாதிக்கும் அளவுக்கு இருப்பதும் உங்களை எச்சரிக்கும் அடையாளங்களாகும்.


friends  facility service

இளம் மாணவர்கள் மற்றும் பணிபுரியும் பெண்களில் பலரும் பீதிக் கோளாறால் பாதிக்கப்படுகின்றனர் ஆனால் அதற்கு அவர்கள் சிகிச்சை எடுத்துக்கொள்வதில்லை என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பதற்றம்,பரபரப்பு, களைப்பு, தூக்கமின்மை, தொடர்ந்து ஏதேனும் நினைவுகளை அசை போட்டபடி இருப்பது, கவலைப்படுவது போன்றவை மனக்கலக்க கோளாறுகளின் அறிகுறிகளில் சிலவாகும். பீதி கோளாறு உள்ளவர்களுக்கு, திடீரென்று பீதியடைவார்கள், அந்த சமயங்களில் இதயத்துடிப்பு அதிகரிக்கும், சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும், மயக்கம் ஏற்படும், உளறுவார்கள், தொண்டை அடைத்துக்கொள்ளும். வேறு சிலருக்கு திடீர் வயிற்றுப்போக்கு ஏற்படும் இந்த அறிகுறிகளில் ஏதேனும் ஒன்றோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட அறிகுறிகளோ ஒருவருக்கு அடிக்கடி தென்பட்டால், குறித்த நேரத்தில் உடலியல் மருத்துவரை சந்திக்க வேண்டும் தேவைப்பட்டால் அவரின் வழிகாட்டுதலில் உளவியல் நிபுணரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.


* சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் (Eating disorders) ஒரு பெண்ணின் உடல் எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்த சமூகத்தின் அபிப்பிராயம், சாப்பிடுவது குறித்த கோளாறுகள் பெண்களுக்கு ஏற்பட ஒரு முக்கிய காரணமாக உள்ளது. ஆண்களை விட, பெண்களுக்கே சாப்பிடுவது தொடர்பான கோளாறுகள் வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* Anorexia Nervosa: இந்த பிரச்சனை உள்ளவர்கள் உடல் மெலிந்து காணப்படுவார்கள், எடை குறைவாக இருக்கும், உடல் எடை கூடிவிடும் என்று அதிகம் பயப்படுவார்கள். இதனால் மிக குறைவாகவே உணவு சாப்பிடுவர், பல நேரங்களில் சாப்பிடாமலேயே தன்னைத்தேனே வருத்தி கொள்வர். (இதனால் பெரும்பாலும் இவர்கள் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் மற்றும் உடல் சோர்வு ஆகியவற்றால் பெரிதும் பாதிக்கப்படுவர்)


* Bulimia Nervosa: இது பெண்களுக்கு வரும் மற்றொரு பிரச்சனையாகும். இந்த பிரச்சனை உள்ளவர்கள் அளவுக்கு அதிகமாக சாப்பிடுவார்கள், பிறகு வாந்தி எடுத்து உணவை வெளியேற்றுவார்கள்.

* இளம் வயதினருக்கு அதிகமாக ஏற்படும் பிரச்சனைகளில் ஆஸ்துமா மற்றும் வகை -1 நீரிழிவுநோய்க்கு அடுத்த இடத்தில் இருக்கும் நாள்பட்ட பிரச்சனை பசியின்மை ஆகும். (எனினும்,மெலிதாக இருப்பவர்கள் எல்லோருக்கும் பசியின்மை பிரச்சனை உள்ளது என்று கருத முடியாது என்பதை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.)

* உங்களுக்கோ, உங்களுக்கு தெரிந்தவர்களுக்கோ எப்போதும் உடல் எடை கூடிவிடும் என்ற பயம், உடல் எடை பற்றிய கவலை இருந்தால்,ஓரிரு வாய் சாப்பிட்டுவிட்டு அத்தோடு போதும் என்று சொல்லும் பழக்கம் இருந்தால்,அவர்கள் உளவியல் மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டியது அவசியம். பெண்களுக்கு ஏற்படும் மனநல பாதிப்புகளை அலட்சியப்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள்:

* Menstrual imbalance: பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு பெரும்பாலும் மனநல பிரச்சனைகளே முக்கிய காரணமாக அமைகின்றது. சிறு வயதில் ஏற்படும் கசப்பான அனுபவங்கள் காரணமாக பெண்மையை வெறுக்கும் பெண்களுக்கும்,மனதளவில் பெண்மையை ஏற்றுக்கொள்ளா பெண்களுக்கும் Rejection of one's femininity மனநல பிரச்சனைகளும்,சீரற்ற மாதவிடாய் சுழற்சியும், Estrogen hormone பாதிப்பும் ஏற்படுகின்றது.

இதே போல் பெண்களுக்கு ஏற்படும்

* ஒற்றை தலைவலி்

* கர்ப்பப்பை நீர்க்கட்டிகள்

* மார்பக புற்றுநோய் ஆகியவையும் நாள்பட்ட மனநல பாதிப்பின் முதிர்ச்சியால் ஏற்படும் மிக முக்கிய பிரச்சனைகளே...

(இதைப்பற்றி பின் வரும் பதிவுகளில் பார்ப்போம்) மனநலம் காப்போம் மகிழ்வுடன் வாழ்வோம்.

நன்றி...

வாழ்க தமிழ்...

வாழ்க வளமுடன்...

 
 
 

Recent Posts

See All
வேதம் என்றால் என்ன part 2

வேதம் ஒரு புத்தகம் அல்ல !!! தமிழில் வேதத்தை “எழுதாக் கிளவி” என்பார்கள். அதாவது வேதத்தை எழுதி வைத்துப் படிக்க மாட்டார்கள். வேதத்தைப்...

 
 
 
வேள்வி என்றால் என்ன

ஆரியப் பார்ப்பனர்கள் வேதம் கற்றனர், வேள்விகள் செய்தனர்; வேள்விகளால் நாம் நினைத்ததைச் சாதிக்க முடியும் என்றெல்லாம் கதையளந்தனர்....

 
 
 
வேதம் என்றால் என்ன? 1

இந்தியப் பண்பாட்டுக்குப் பழமையான ஆதாரமான முதல்நூல் வேதம். உலகிலேயே மிகவும் பழமையான நூல் வேதம் என்பதைச் சரித்திர வல்லுனர்கள் அனைவரும்...

 
 
 

Comments


Our Company

Friends Facility Service is committed to doing business the right way. We are actively involved in corporate responsibility and sustainability initiatives.The secret to our success lies in how we tailor our solutions to client needs, how we manage risks, and how our engaged teams add the power of the human touch in everything we do. 

Head Office
Operating Hours

G.N.Chetty Road,

T.Nagar,

Chennai -600017.

 

Sunday to Saturday

24/7 all day

working day

Friends Facility Service, Be Friendly.

bottom of page