மகிழ்ச்சியைத் தேடாதீர்கள், உருவாக்குங்கள்...
- Deva
- Oct 23, 2019
- 1 min read
பெரும்பாலான தம்பதியரின் பாலுறவு மூன்று நிமிடத்திற்குள் முடிந்து விடுகிறது.

இது தான் மனைவியை போகப் பொருளாக பயன்படுத்தும் பேதைமை. இவ்வாறு போகிப்பதற்கான பொருளாக மனைவி உறுதியாக மறுக்கும் போதுதான், அங்கே சண்டை துவங்கி விடுகிறது. அது தான் குடும்ப விவகார சண்டை இரவு நேரத்தில் தம்பதியரிடையே நடைபெறுகின்ற குடும்ப விவகார சண்டை காரணமாக, பலருடைய இல்லற வாழ்கை வெளியில் தெரியாத போர்க்களமாக மாறி கொண்டிருக்கிறது.
ஒன்றாய் வாழும் தம்பதியர் பலர் வாழ்வதைப்போல் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்
பல தம்பதியர் தங்களுக்கு கிடைத்த வாழ்க்கையை வாழவில்லை, வாழ்வதைப் போல நடித்து கொண்டிருக்கிறார்கள்.
பொருளாதார தற்சார்பின்மை காரணமாக சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்,குழந்தைகளின் எதிர்காலம் கருதி சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்,சமூக நிர்பந்தம் கருதி சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்,எங்கே செல்வது என தெரியாமல் சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள், பெற்றோரின் வற்புறுத்தல் காரணமாக சிலர் சேர்ந்து வாழ்கிறார்கள்.
ஆனால்,அன்பு காரணமாக மட்டும் சேர்ந்து வாழும் தம்பதியரின் எண்ணிக்கை மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
குழந்தையின் எதிர்காலம், பொருளாதார தற்சார்பின்மை, அயலரின் பார்வை,போக்கிடம் இன்மை,தனிமையை எதிர்கொள்ள அச்சம், சட்டத்தை கண்டு பயம், போன்றவையே இன்றைய குடும்ப வாழ்க்கையை கட்டிக்காக்கும் அரண்களாக உள்ளன.
அதற்கான ஒரே காரணம் அன்பை உருவாக்கக்கூடிய வேதிப்பொருள் தம்பதியரின் மூளையில் போதுமான அளவிற்கு சுரப்பதில்லை.
தம்பதிகளும் ஏனோ அதற்கு முயல்வதுமில்லை.
மகிழ்ச்சியை தேடாதீர்கள்
உருவாக்குங்கள்.
நன்றி...
வாழ்க தமிழ்...
வளர்க தமிழ்...
வாழ்க வளமுடன்...
Comments