நிக்கோலஸ் லுட்விக் சின்சென்டோர்ஃப்
- Deva
- Jul 13, 2023
- 1 min read
Updated: Sep 5, 2023
*புதிய வெளியிடு*
18 ஆம் நூற்றாண்டில் மிகப் பெரிய உயிரோட்டமுள்ள மிஷனரி இயக்கத்தை உருவாக்கி கிறிஸ்துவின் அன்பை உலகெங்கும் பறைசாற்ற நூற்றுக்கணக்கான மிஷனரிகளை உலகெங்கும் அனுப்பி , வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய மாமனிதன் *நிக்கோலஸ் லுட்விக் சின்சென்டோர்ஃப்
* அவர்களின் வாழ்வையும் பணியையும் பலர் அறிய தமிழில் *அகிலத்தை அசைத்த அசாத்திய மனிதன்* என்ற தலைப்பில் நூலாக எழுதி வெளியிட ஆண்டவர் கிருபை செய்தார்.
அருட்பணி சரித்திரத்தில் அளப்பெரிய சாதனை படைத்த அருட்பணி இயக்கம் தான் மொரேவிய மிஷனரி இயக்கம். ஆண்டவர் பெரிதான ஒரு எழுப்புதலை மொரேவியர்கள் மத்தியில் ஏற்படுத்தினார். இவர்கள் தொடர்ச்சியான 24 மணிநேர ஜெபமொன்றை ஆரம்பித்தனர். அது தடைபடாமல் 100 வருடங்களுக்குத் தொடர்ந்தது.
மொரேவிய மிஷனரிகள் அடிமைகள் மத்தியில் தங்களை அடிமைகளாக விற்று மிஷனரிகளாக சென்றனர். அவர்களில் கொழுந்து விட்டெரிந்த ஒரே நோக்கம் பூமியின் கடைசிபரியந்தமும் சுவிசேஷத்தை அறிவிப்பது ஆகும்.
இன்நூல் வாசிக்கும் ஒவ்வொருவரையும் நிச்சயமாய் தம்மை கிறிஸ்துவுக்காக அர்ப்பணிக்க தூண்டி விடும்.
வெளியீடு: YWAM இளைஞர் அருட்பணி இயக்கம்
*விலை: 300*
நூல் தேவைப்படுவோர் அழைக்க +94 76 288 9713 (சகோ. பிரதீப் WhatsApp)
Comments