அக்டோபர் 14 உலக ஸ்பைரோ மெட்ரி நாள்.
- Deva
- Oct 14, 2019
- 1 min read
நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டோரை ஆரம்ப கட்டத்தில் கண்டறிவது முக்கியம். அதற்கு "ஸ்பைரோமெட்ரி' கருவி பயன்படுகிறது உலக அளவில் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. புகைப்பிடித்தல்,மாசுபட்ட காற்று, உடல் உழைப்பு இல்லாத வாழ்க்கை,முறையற்ற உணவு பழக்கம் போன்றவை நுரையீரல் நோய்க்கான முக்கிய காரணங்களாக இருக்கின்றன. 2030 ம் ஆண்டு மரணம் அடைவோர் எண்ணிக்கையில் சி.ஓ.பி.டி. என்னும் நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்டோர் அதிகம்பேர் இருப்பார்கள் என்பது விஞ்ஞானிகளின் கணிப்பாக இருக்கிறது.
''ஆஸ்துமா,சி.ஓ.பி.டி., பல்மோனரி பைப்ரோசிஸ்,சைஸ்டிக் பைப்ரோசிஸ் போன்ற நுரையீரல் நோய்களை ஸ்பைரோமெட்ரி கருவி மூலம் எளிதில் கண்டறியலாம். ஈரோப்பியன் லங் பவுண்டேஷன் என்ற அமைப்பு அக்டோபர் 14 ஆம் தேதியை ஸ்பைரோமெட்ரி தினம் ஆக அறிவித்தது. இதன் நோக்கம் அன்று அந்த கருவியால் நுரையீரல் பரிசோதனை செய்து கொள்ள ஒரு வாய்ப்பளிக்க வேண்டும் என்பதே" இதய நோய்க்கு இ.சி.ஜி. கருவியை போலவும்,மூளையின் செயல்பாட்டுக்கு இ.இ.ஜி. கருவியை போலவும்,நுரையீரல் நோயை கண்டறிய ஸ்பைரோமெட்ரி கருவி உதவுகிறது. இந்த ஸ்பைரோமெட்ரி கருவி பயன்படுத்த எளிதானது,பக்க விளைவு இல்லாதது.
பரிசோதனை யார் செய்யலாம்? புகைப் பிடிக்கும் பழக்கமுள்ளவர், 45 வயதுக்கு மேற்பட்டவர்கள், நுரையீரல் நோய் உள்ளவர்கள், மாசு அதிகமுள்ள இடத்தில் பணியாற்றுவோர், சுரங்கம், ரப்பர் தொழிற்சாலை, ரசாயன தொழிற்சாலை, பருத்தி ஆலைகளில் பணியாற்றுவோர் இந்த பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். பரிசோதனை யார் செய்ய கூடாது? அண்மையில் மாரடைப்பு வந்தவர்கள், ரத்தவாந்தி உள்ளவர்கள், அண்மையில் கண்அறுவை சிகிச்சை செய்தவர்கள், காசநோய் உள்ளவர்கள், கடுமையான தலைக்காயம் ஏற்பட்டவர்கள் இந்த பரிசோதனையை செய்ய கூடாது. ஸ்பைரோமெட்ரி ஆனது ஒரு மனிதனின் வயது, உயரம், எடை, இனம், பால் ஆகியவை மூலம் கணக்கிடப்படுகிறது. நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு ஸ்பைரோமெட்ரி அளவு 80 சதவிகிதத்துக்கும் குறைவாக இருக்கும். பரிசோதனைக்கு முன் கவனிக்க வேண்டியவை... ஸ்பைரோமெட்ரி பரிசோதனைக்கு முன்..
* ஆறு மணி நேரம் புகைபிடிக்காமல் இருக்க வேண்டும். * அதிக உணவு உட்கொள்ள கூடாது.
* இறுக்கமான ஆடைகளை தவிர்க்க வேண்டும்.
* பரிசோதனையின் போது மூன்று, நான்கு முறை சாதாரணமாக மூச்சை இழுத்துவிட வேண்டும்.
பிறகு நீளமாக மூச்சை இழுத்து உடனடியாக காற்றை வெளியே ஊத வேண்டும். இச்செய்முறையை மூன்று,நான்கு முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும். ஸ்பைரோமெட்ரி பரிசோதனை மூலம் மக்களிடையே விழிப்புணர்வு கொண்டு வர முடியும். நுரையீரல் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும், நுரையீரல் நோயின் தன்மையை குறைக்கவும் முடியும்.
நன்றி...
வாழ்க தமிழ்...
வாழ்க வளமுடன்...
Comments