2070 ல் ஒரு கடிதம் ✍️
- Deva
- Jun 24, 2020
- 1 min read
2070 ல் வாழும் ஒருவர் தன்னுடைய கடிதத்தில் அவருடைய வாழ்க்கை பற்றி குறிப்பிடுவதாக எழுதப்பட்ட கட்டுரை ஒன்றின் ஒரு பகுதி பின்வருமாறு 👇👇
என்னுடைய சிறுநீரகங்கள் இரண்டுமே செயலிழந்துவிட்டது. ஒரு மனிதனுடைய சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக வேலை செய்ய அவனுக்கு தினமும் 20 டம்ளர்கள் தண்ணீர் தேவை. ஆனால் எனக்கு கிடைப்பதோ வெறும் அரை டம்ளர் தண்ணீர் மட்டுமே..
இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் தொழிற்சாலைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அரசு நடத்தக்கூடிய ஒரு சில தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் ஊழியர்களுக்கு அவர்களுக்கான சம்பளம் தண்ணீராகவே வழங்கப்படுகிறது.
ஒரு சில இடங்களில் மட்டுமே சிறிதளவு நீர் கிடைக்கிறது. அப்படிப்பட்ட இடங்களை இராணுவம் ஆயுதங்கள் கொண்டு பாதுகாக்கிறது. நாட்டின் முக்கிய பிரமுகர்களை தவிர வேறு யாரும் அங்கே உள்ளே நுழைய அனுமதி இல்லை.
நான் சிறுவனாக இருந்தபோது என்னுடைய பாட்டியும் என்னுடைய அம்மாவும் மற்ற பெண்கள் அனைவரும் அதிக முடி வைத்திருப்பார்கள். ஆனால் இப்போது தண்ணீர் பற்றாக்குறையால் பெண்கள் மொட்டை அடித்துக் கொள்கின்றனர் அதிகமான முடியை அவர்களால் பராமரிக்க முடிவதில்லை.
நான் சிறுவனாக இருந்தபோது என் தந்தை அதிக தண்ணீர் கொண்டு அவருடைய காரை கழுவுவார். ஆனால் என்னுடைய மகனிடம் இப்போது நான் இதை கூறினால் அவன் "என்னால் இதை நம்ப முடியாது" எனக் கூறுகிறான்.
இங்கே கொலை மற்றும் கற்பழிப்பைக் காட்டிலும் தண்ணீர் திருடுவது மிகப்பெரிய குற்றமாக பார்க்கப்படுகிறது. ஒருமுறை ஒருவர் தண்ணீரை திருடியது நிரூபிக்கப்பட்டு விட்டால் இனி யாரும் அந்தத் தவறை செய்யாமல் இருக்க அனைவரின் முன்பாகவும் அவருக்கு மரண தண்டனை வழங்கப்படுகிறது.
முறையாக விவசாயம் பயிலாமல் போலி சான்றிதழ்களை வைத்துக்கொண்டு விவசாயம் செய்து வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அரசு அனுமதியின்றி தண்ணீரை பயன்படுத்தியது மேலும் "போலி விவசாயி" என அவர்கள் மேல் வழக்கு போடப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த கடிதத்தை 2020இல் வாழ்ந்த மக்களிடம் என்னால் கொண்டு சேர்க்க முடிந்தால் உலகை காப்பாற்ற அவர்களுக்கு இன்னும் ஒரு வாய்ப்பு உள்ளது என என்னால் கூற முடியும். ஆனால் அது நடக்கப் போவதில்லை....
Comments